May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

7.5 சதவீத ஒதுக்கீடு பிரச்சினை முடிந்த பிறகே மருத்துவ கலந்தாய்வு

1 min read

Medical consultation after completion of 7.5 per cent allocation issue

24/10/2020

மருத்துவக் கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதிலளிக்கும்போது கூறியதாவது:-

கலந்தாய்வு

ஏற்கனவே இது குறித்து தெளிவான அறிக்கையை தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்டிருப்பதாலும், இந்த விவகாரம் தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாலும் தான் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மத்திய அரசால் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.