June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

குண்டாறு அணையில் மூழ்கி சிறுவன் சாவு

1 min read

Boy dies after drowning in Gundaru dam

2/11/2020

குண்டாறு அணையில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

குண்டாறு அணை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குண்டாறு அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 36 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையில் இந்த அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

இந்த அணயைில் சுற்றுவட்டார மக்கள் விடுமுறை நாட்களில் கொரோனா தடை உத்தரவை மீறி குண்டாறு நீர் வழித்தடங்களில் சென்று குளித்து வருகின்றனர்.

செங்கோட்டையை சேர்ந்த கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாவஸ் என்பவரின் மகன் ஜிப்ரின் (வயது15) தனது நண்பர்களுடன் குண்டாறு அணைக்கு குளிக்க சென்றார்.

சாவு

அணையில் நண்பர்களுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சிறுவன் ஜிப்ரின் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுபற்றி வெளியே சொல்லாமல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் ஜிப்ரின் பெற்றோர்கள் நண்பர்களிடம் விசாரித்ததில் நடந்தவற்றை கூறியுள்ளனர். அதன்பின்னர் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் செங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல மணிநேரம் தேடி சிறுவனின் உடலை பிணமாக மீட்டனர் .
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *