August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

காமராஜருக்கு பெருமை சேர்க்கும் பட்ஜெட்-தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு பாராட்டு

1 min read

Budget brings pride to Kamarajar – Tamil Nadu Nadar Uravinmurai Federation lauds the move.

5.8.2026
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் சிறப்பு பள்ளிகள் தொடங்கி, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடை, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகளை கட்டணமின்றி வழங்குவதற்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.
மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மாணவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பாக அமையும்.
அதேபோல், தமிழ்நாடு பனை பொருள் மேம்பாட்டு கழகத்தை அமைத்து, பதநீர் பதப்படுத்துதல், பனைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்க முடிவாகும்.
பெருந்தலைவர் காமராஜரின் கல்விச் சேவையையும், பனைத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் நலனையும் போற்றும் வகையில் இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அகரக்கட்டு லூர்து நாடார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *