June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சினிமா எடிட்டர் கோலா பாஸ்கர் மரணம்

1 min read

cinema editor Kola Bhaskar Passes away

4/11/2020

பல சினிமா படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

தமிழ் திரையுலகில் பிரபல எடிட்டராக இருந்துவர் கோலா பாஸ்கர். இவர் தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கண்டேன் காதலை உள்பட பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர்‘.

இவர் கடந்த சில காலமாக தொண்டை புற்றுநோயால் அவதிப்ட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 55
அவருக்கு மனைவியும், பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியதற்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.