June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

1 min read

2 women arrested for jewelery theft

7/11/2020
தென்காசி மாவட்டத்தில் பஸ் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

செயின் பறிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் பஸ்களில் பயணம் செய்த பயணிகளின் தங்க செயின்கள் பறிப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து கடையநல்லூர், சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில் வாசுதேவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வாசுதேவநல்லூர் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2 பெண்கள் கைது

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இரண்டு பெண்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சிவகாசி இந்திரா நகரைச் சேர்ந்த செல்வம் மனைவி பொன்னுத்தாய் (வயது 25), மாசானம் மனைவி மாலதி (20) என்றும், அவ்விருவரும் பஸ்களில் பயணம் செய்து பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதனையடுத்து பொன்னுத்தாய், மாலதி ஆகிய இருவரையும் ஆய்வாளர் அந்தோணி கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் தங்க செயின்களை பறிமுதல் செய்தார். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *