May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

எண்ணெய் குளியலும்லட்சுமி அருளும்

1 min read


Get Letsumi Grace in Sesame Oil Bath தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகமிக நல்லது. இதனை கங்கா ஸ்நானம் என்று சொல்கிறோம். அன்றைய தினம் எண்ணெய் குளியல் செய்தால் கங்கையில் நீராடியதன் புண்ணியம் கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்- பட்டவர்கள் தவிர மற்ற அனை- வரும் கண்டிப்பாக கங்கா ஸ்நானம் என்னும் எண்ணெய் குளியல் செய்து லட்சுமி அருளை பெறலாம்.
அன்றைய தினம் எள்ளில் இருந்து எடுக்கும் நல்எண்ணெய்யை தான் பயன்படுத்த வேண்டும். நல்ல எண்ணையில் லட்சுமி வாசம் செய்கிறார். அதற்கான புராண வரலாறை காண்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்து கொண்டிருந்தனர். அப்போது மத்து (மலை) பாரத்தால் கடலில் பதிந்துவிட்டது. இதனால் தொடர்ந்து கடைய முடியாமல் தேவர்களும், அசுரர்- களும் திணறினார்கள். அப்போது மகாவிஷ்ணு ஆமை வடிவம் (கூர்ம அவதாரம்) கொண்டு கடலுக்குள் புகுந்து மலையை தன் முதுகில் தாங்கினார். அதன்பின் எளிதாக கடலை கடைந்து அமிர்தத்தை பெற்றார்கள்.
விஷ்ணு ஆமையாக மாறி கடலுக்கு சென்றது லட்சுமிக்கு தெரியாது. அவள் தன் கணவரை தேடி அலைந்தாள். இறுதியில் இருக்குமிடம் தெரிந்தவுடன் அங்கு லட்சுமி ஓடினாள். விஷ்ணு ஓடி ஒளிந்து ஒளிந்து விளையாட்டு காட்டினார். அந்த நேரத்தில் தீனதீபம் என்று அழைக்கப்படும் எள் செடிகள் நிறைந்த காட்டுக்குள் லட்சுமிஓடியதால் அவள் பாதத்தில் பட்டு எள் அனைத்தும் எண்ணெய் யாக கசிந்தது. லட்சுமியின் பாதம் பட்டதால் நல்லெண்ணை புனிதமானது.
இறுதியில் திருமகள் விஷ்ணுவை கண்டுபிடித்து விட்டாள். லட்சுமியின் காலில் எள் செடி பட்டு எண்ணையாக கசிந்த தினம் தீபாவளி நாள். அப்போது லட்சுமி எள்செடிக்கு ஒரு வரம் அளித்தாள். அதாவது தீபாவளி நாளில் தான் நல்லெண்ணையில் வாசம் செய்வ- தாக கூறினாள். எனவேதான் தீபாவளி அன்று நல்லெண்ணை தேய்த்து குளித்தால் நமக்கு லட்சுமி கடாச்சம் கிடைக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.