June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சாம்சங் கேலக்ஸி எஸ்20 செல்போன் விலை அதிரடி குறைப்பு

1 min read

Samsung Galaxy S20 Cellphone Price Action Reduction

14/11/2020

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மாடல் செல்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் செல் போன்

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிடிஎஸ் எடிஷனை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இவற்றில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் செல்போனின் விலை ரூ. 87,999 ஆக உள்ளது. கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிடிஎஸ் செல்போன் விலை ரூ. 14,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

குறைப்பு

அந்த செல்போன்கள் வெளியான ஐந்து மாதங்களுக்குள் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் ரூ. 77,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி சாம்சங் கேர் பிளஸ் ஆக்சிடண்டல் மற்றும் லிக்விட் டேமேஜ் சேவைக்கு 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடலை ரூ. 5,999 விலையில் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

போட்டோ கார்டுகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மற்றும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் அழகிய ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *