June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் ரஜினி காந்த்துக்கு காய்ச்சலா?

1 min read

Is actor Rajinikanth having a fever?

22/11/2020

நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சலா என்பதற்கு அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியலுக்கு வர ஆயத்தமான ரஜினியிடம், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தற்போது அரசியல் பிரவேசம் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கடிதம் வெளியானது.
ஆனால் அந்தக் கடிதத்தை தான் வெளியிடவில்லை என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். ஆனாலும் டாக்டர்கள் தனக்கு அளித்த அறிவுரைகள் உண்மை என்றும் அவர் கூறினார்.
காய்ச்சலா?

இந்தநிலையில், சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு பண்ணை வீட்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த ரஜினியின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் அகமது, “நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை. இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி; அவர் போயஸ்கார்டன் வீட்டில் தான் இருக்கிறார்,'”என தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.