May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆஸ்கார் விருது போட்டியில் மலையாள படம்

1 min read

Malayalam film in the Oscar competition

26/11/2020

ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட “ஜல்லிக்கட்டு” என்ற மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு எருமையை பிடிக்க கிராமமே முயற்சிப்பது போன்ற படம். இது மனித நாகரிகம் பற்றிய ஒரு உருவகக் கதையாகும்.

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியன், நியூட்டன், பார்பி, பீப்லி லைவ் போன்ற திரைப்படங்கள் கடந்த ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, எந்த இந்திய படமும் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் அகாடமி விருதை வெல்லவில்லை. மூன்று படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்று உள்ளது . அவை மதர் இந்தியா (1957), சலாம் பம்பாய் (1988) மற்றும் லகான் (2001) – இவை அனைத்தும் இந்தி மொழி படங்கள் ஆகும்.

3-வது படம்

குரு (1997) மற்றும் ஆதாமின்டே மகன் அபு (2011) ஆகிய படங்களுக்கு பிறகு அகாடமி விருதுகளுக்கு இந்தியாவில் தேர்வு செய்யபட்ட மூன்றாவது மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு ஆகும். 93 வது அகாடமி விருதுகள் ஏப்ரல் 25, 2021 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறு கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.