பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா
1 min read
Corona to BJP leader JP Natta
13/12/2020
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தினசரி சராசரியாக 30 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி வருகிறது.
இந்த கொரோனா சாதாரண மக்கள் முதல் முதல்-மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது.
இப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா-வுக்கு இன்று( ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோன பாதிப்பு சிறிய அளவே இருப்பதால் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேபி நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனாவுக்கான தொடக்க அறிகுறிகள் இருந்ததால் நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் உடல்நலத்துட உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரை படி நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
என கூறியுள்ளார்.
கல்வீச்சு
ஜே.பி. நட்டா கடந்த 10-ந் தேதி மேற்குவங்காள மாநிலத்திற்கு சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரசாரத்தின்போது அவர் பயணித்த வாகனம் மர்மநபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜேபி நட்டா இம்மாத இறுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழகம் வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.