June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்

1 min read

Rajinikanth cut the cake to celebrate his birthday

13/12/2020

ரஜினிகாந்த் நேற்று தனது 70-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

70-வது பிறந்தநாள்

ரஜினிகாந்த்துக்கு நேற்று 70-வது பிறந்தநாள். இதையொட்டி அவரை சந்திக்க போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர்கள் திரண்டனர். பலர் ரஜினி போல் வேஷம்போட்டு வந்திருந்தனர். ரஜனி வாழ்க என்று கோஷம் போட்டனர்.
ஆனால் அவர்களால் ரஜினியை பார்க்க முடியவில்லை. ரஜினி வீட்டில் இல்லை என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறியதை அடுத்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய தகவல் வெளியாகி உ்ளளது. அவர் நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினார். அவர் வெட்டிய கேக் விசே‌ஷமாக வடிவமைக்கப் பட்டு இருந்தது. அதில் ‘‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி குடும்பத் தினர் அனைவருக்கும் ரஜினி வழங்கினார்.

பழமையான கார்

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விதம் விதமாக வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். அதில், ‘ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது தந்தையின் அபூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். பழமையான கார் ஒன்றின் அருகில் ரஜினி குர்தா அணிந்து அந்த படத்தில் காட்சி அளித்தார். இந்த கார் தான் ரஜினி வாங்கிய முதல் கார் ஆகும். இன்று ரஜினியிடம் பல நவீன சொகுசு கார்கள் இருந்தாலும் அந்த முதல் காரை இன்றும் அவர் பாதுகாத்து வருகிறார்.

ஐஸ்வர்யா வெளியிட்ட அந்த படத்தை பல்லாயிரக் கணக்கானோர் மறுபதிவாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.