June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

அண்ணாத்த படத்தில் நடிக்க ரஜினி ஐதராபாத் சென்றார்]

1 min read

Rajini goes to Hyderabad to act in Annatha

13/12/2020

நடிகர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்.

தனிக்கட்சி

நடிகர் ரஜினி காந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சி தொடங்கிய பின் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலையில் அவர் ஈடுபடுவார்.
அதற்குள் அவர் நடித்துவரும் அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்கத் திட்டமிட்டார்.

படப்பிடிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது. இப்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் நாளை அந்தப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனி விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.

கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *