June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பொங்கல் பரிசு 2,500 வழங்கும் திட்டத்தை எடப்பாடி தொடங்கி வைத்தார்

1 min read

Edappadi started a program to give away 2,500 Pongal prizes

21/12/2020

தமிழகத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.2,500 பொங்கல் பரிசு

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்தார்

அரசாணை வழங்கப்பட்டதை அடுத்து பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று( திங்கட்கிழமை) மாலை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பி.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *