சனிபெயர்ச்சி பலன்கள்-மகரம்
1 min read
sani perchi palangal-Magaram- Kaliyur Narayanan
25-12-2020
சனி பகவான் நவக்கிரகங்களில் முக்கியமானவர். சனி பகவான் சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறார் எனவேதான் சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை இரவு 4-50 மணிக்கு (ஞயிற்றுகிழமை அதிகாலை) நிகழ்கிறது. அப்போது அவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். மகரராசி சனிபகவானுக்கு சொந்த வீடாகும் ஆதலால் இந்த பெயர்ச்சி மூலம் அவர் அனைவருக்கும் சிறப்பையே தர விரும்புவார். ராகு-கேதுவிற்கு நட்பு வீடாகும்.மேலும் அங்கு சனிபகவான் குருவோடு இணைகிறார் அது குருவிற்கு நீச்சவீடாகும். இதனால் நாட்டிண் தொழில்துறை சிறந்து விளங்கும். பொருளாதார வளம் மேம்படும்.
இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் சிம்மம்,விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினருக்கு மிகவும் சிறப்பான பலன்கûüயும். ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம்,தனுசு,மகரம்,கும்பம்ஆகிய ராசியினருக்கு பார்வைகüôல் நற்பலன் &கûüயும் தருவார்.மேஷ ராசியினருக்கு நன்மைகள் தருவார். தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை ஆண்டு சனிகாலம் ஆகும். மிதுன ராசியினருக்கு அஷ்டமத்து சனிகாலம் ஆகும்.
சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் 21-5-2021முதல் 9-10-2021 வரையும்,6-6-2022 முதல் 25-10-2022 வரையும் வக்கிரம் அடைகிறார். வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். அடுத்த சனிப்பெயர்ச்சி 29-3-2023 அன்று நடக்கிறது. அப்போது அவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் குருபகவான் இரு முறையும், ராகு-கேது ஒரு முறையும் இடம் மாறுகிறார்கள். தற்போது மகரராசியில் இருக்கும் குருபகவான் 4-4-2021 அன்று அதிசாரம் அடைந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.அவர் 14-9-2021 அன்று அதிசாரம் முடிந்து மகர ராசிக்கு செல்கிறார்.அதன்பின் அவர் 13-11-2021 கும்ப ராசிக்கு மாறுகிறார். இதனை அடுத்து 14-4-2022 மீனராசிக்கு மாறுகிறார். 22-4-2023 மேஷராசிக்கு மாறுகிறார்
தற்போது ராகு ரிஷப ராசியில் இருக்கிறார். கேது விருச்சிக ராசியில் இருக்கிறார்.21-3-2022 அன்று ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்போது ராகு ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும்,கேது விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும் இடம் பெயருவார்கள்.
– பண்டித காழியூர் நாராயணன்