June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதி வரை நீடிப்பு- மத்திய அரசு அறிவிப்பு

1 min read

Curfew extended till January 31 – Federal Government announcement

28-12-2020
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா பரவ¬ கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது.வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
அதன் பின்னர் இந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதே நேரம் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றப் பகுதிகளில் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
தற்போது நடைமுறையில் இருக்கம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ந் தேதி (புதன்கிழமை)யுடன் நிறைவடைகிறது.

ஜனவரி 31-ந் தேதி

இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதிலும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *