June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சொத்துப்பட்டியலை வெளியிட துரைமுருகன் தயாரா?-எடப்பாடி பழனிசாமி சவால்

1 min read

Is Thuraimurugan ready to publish the list of assets? -Edappadi Palanisamy Challenge

28-12-2020
சொத்துப்பட்டியலை தான் வெளியிடத்தயார் என்றும் துரைமுருகன் வெளியிட தயாரா என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. முதலமைச்சர் பழனிசாமி பிரசாரத்திற்காக கோவை இன்று வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது.
சொத்துப் பட்டியல்
ஊழல் புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா?. சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார். துரைமுருகன் தயாராக உள்ளாரா?. மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை
திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர். திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நடிப்பில் கமல்ஹாசன் சினிமாவில் சாதனையாளராக இருக்கலாம், ஆனால் அரசியலில் ஜீரோ தான்.
இவ்வாறு முதல-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *