இன்று பரசுராமர் ஜெயந்தி
1 min readToday Parasuramar Jayanti
1/1/2021
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று பரசுராமர். இவர் கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் தேய்பிறை (பவுர்ணமிக்கு பிறகு) துவிதியை திதியில் ஜமதக்கனி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக அவதரித்தார். பரசு என்ற ஆயுதத்தை ஏந்தியுள்ளதால் இவர் பரசுராமர் என்று பெயர்பெற்றார்.
கற்பில் சிறந்த பெண்ணான ரேணுகாதேவி தினமும் பச்சை மண்ணில் குடம் செய்து அதில் தண்ணீர் கொண்டு வருவார். ஒருமுறை ஆற்றில் தோண்டிய ஊற்றில் விண்ணில் சென்ற இந்திரனின் அழகை பார்த்து இவ்வளவு அழகா என மனதில் கருதினார். இதனால் அவர் பச்சை மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது குடம் உடைந்தது. இதனை அறிந்த ஜமதகன்னி முனிவர் தன் மனைவியை கொல்ல மகன் பரசுராமரை பணித்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழிக்கேற்ப தன் தாயை பரசுமராமர் கொன்றார். பின்னர் தந்தையின் அனுமதி பெற்ற தாயரை உயிர்ப்பித்தார். சென்னையில் பல இடங்களில் தனித் தலையுடன் ரேணுகாதேவி கோவில் இருப்பதை காணலாம். பரசுராமர் ஜெயந்தி 1-1-2021 அன்று வருகிறது. அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் காலை 9.28 மணிவரைதான் பிரதமை திதி உள்ளது. எனவே அதற்குள் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்.