தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா
1 min readDeclining corona in Tamil Nadu
31.12.2020
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 937 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பரவில் கண்டறியப்பட்டு உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 937 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,18,014 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 573 பேர் ஆண்கள், 364 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,94,355 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,23,625 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டுமு 237 ஆய்வகங்களில் 68,761 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 494 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,038 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரத்து 391 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் 6 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் 7 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சென்னையில் 4 பேர், சேலத்தில் 2 பேர், திருவள்ளூர், கோவை, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சை, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,122 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 8,501 பேர் கொரோ£னவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.