June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

1 min read

Professor arrested for sexually harassing student

15.1.2021

கல்லூரி பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் காதல் தொல்லை கொடுத்தார். அவரை போலீசார் சைது செய்து செய்தனர்.

காதல் தொல்லை

சென்னை அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 24). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவி மீது ஆசை கொண்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அதை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அந்த மாணவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒருநாள் அந்த மாணவியை திருமணம் செய்துகொண்டுவிட்டதாக போலியான திருமண பதிவு சான்றிதழை தயாரித்து, அதை ‘வாட்ஸ்-அப்’ பில் பரவவிட்டார்.

கைது

இதுபற்றி அந்த மாணவி அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *