June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கமல்ஹாசன் கட்சிக்கு டார்ச் சின்னம் ஒதுக்கீடு

1 min read

Torch symbol allotted to Kamal Haasan party

15.1.2021
கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சின்னம்
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையட்டி தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்பட்டாத கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சின்னத்தை ஒதுக்கியது. இதில் நடிகர் கமல்ஹாசன் மக்களவை தேர்தலில்போது பயன்படுத்தி பேட்டரி டார்ச் சின்னத்தை இப்போதும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஆனால், புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

ஒதுக்கீடு

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! ” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *