June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மரணம்

1 min read

Former Tamil Nadu Congress leader Gnanadesikan dies

15.1.2021

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் இறந்தார்.

ஞானதேசிகன்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஞானதேசிகன்(வயது 71). இவர் தற்போது ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் 11ந் தேதி திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஞானதேசிகன் இன்று மரணம் அடைந்தார்.

இரங்கல்

மரணம் அடைந்த ஞானதேசிகன் 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்தார். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *