தமிழகத்தில் இன்று கொரோனா 621 ஆக குறைந்தது
1 min read
In Tamil Nadu today the corona has dropped to 621
15.1.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்துள்ளது. இன்று 621 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 700க்கும் குறைவாகவே கொரோனா பதிவாகி வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 621 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,29,573 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,251 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,10,197 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,299 பேர் கொரோனாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.