June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் சந்திப்பு

1 min read

Meeting with Edappadi Palanisamy and Amit Shah in Delhi

18.1.2021

முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று இரவு 7.30 மணி அளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி

முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ( திங்கட்கிழமை) இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் அவர்கள் தேர்தல் தொடர்பாக பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமித்ஷாவுடன் சந்தித்தப் பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுத்தார். அவர் நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

திட்டப்பணிகள்

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் திட்டப்பணிகள் குறித்து பிரதமருடன் எடப் பாடி பழனிசாமி பேச்சு நடத்துகிறார். தமிழகத்துக்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கை மனுக்களையும் முதல்-அமைச்சர் அளிப்பார். சென்னை வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் இணைப்பு திட்ட தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார்.

மேலும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக கரூர்-புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

காவிரி நதியில்கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நடந்தாய்வாழி காவிரி என்கிற திட்டத்துக்கும் நிதி உதவியையும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோருகிறார்.

எடப்பாடி பழனிசாமி நாளை மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *