June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 569 people in Tamil Nadu today

24.1.2021

தமிழகத்தில் இன்று புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது. ஆனால் கடந்த இருதினங்களுக்கு முன் சற்று கூடியது. ஆனால் இப்போது மீண்டும் இறங்குமுகமாக உள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&-

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 569 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுட்டுள்ளது. இவர்களில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் அடங்குவர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,34,171 லிருந்து 8,34,740 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 168 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,29,980ல் இருந்து 2,30,195 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று 642 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,16,878ல் இருந்து 8,17,520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

7 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 7 பேர் இறந்தனர். (நேற்று தமிழக்ததல் 2 பேர்தான் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.) இதில் 4 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில்…

சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 4,085 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 5,04,545 ஆண்கள், 3,30,161 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 4,904 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 62,405 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,53,30,315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம்

இந்தியாவிலேயே கேரளா மற்றும் மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,036 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இன்று மட்டும் 5173 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 72,891 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8,13,550 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 2,752 பேர் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1,743 பேர் குணமா£கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் இன்று 45 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் இதுவரை 20,09,106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,12,264 பேர் குணமடைந்துள்ளனர். 50,785 பேர் உயிரிழந்துள்ளனர். 44,831 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *