செங்கோட்டை நூலகத்தில் மாதிரி போட்டித் தேர்வு
1 min read
Mock competitive exam at Sengottai Library
2/8/2026
தென்காசி மாவட்டம்,
செங்கோட்டை நூலகத்தில் வைத்து ஆகாஷ் அகாடமி பதினெட்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 100 வினாக்களை கொண்ட தமிழ் பாட தேர்வு நடைபெற்றது.
இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தேர்வு எழுதியவர்களின் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாசகர் வட்டத்தின் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டது மேலும் தமிழக அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் முதல் 18 இடம் பிடித்த மாணவர்களுக்கு இன்னும் பல பரிசுகள் காத்திருக்கிறது போட்டித் தேர்வு ஆகாஷ் அகாடமியின் ஆசிரியர் நடத்தி வைத்தார் .பணி நிறைவு நூலகர் கோ. இராமசாமி கலந்து கொண்டார்.
முடிவில் செங்கோட்டை நூலகர் நாகராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்