குற்றாலம் சாரல் திருவிழா: போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் விவரம்
1 min read
Details of the winners of various competitions at the Courtallam Saaral Festival
2.8.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழா 2 வது நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
2 வதுஷநாள் விழாவில் யோகா விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 130 க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டனர்.
இதில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் கடையநல்லூரை சேர்ந்த ஜெயசூர்யா முதலாம் இடமும் சுரண்டையைச் சேர்ந்த தமின் அன்சாரி இரண்டாம் இடமும் சாம்பவர் வடகரையைச் சார்ந்த ஜெயச்சந்திரன் மூன்றாம் இடமும் 13 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கடையநல்லூரைச் சார்ந்த தனுஷ் உடன் முதலாம் இடமும் தென்காசியை சேர்ந்த அஸ்வின் இரண்டாம் இடமும் சுரண்டையைச் சேர்ந்த தாரகன் மூன்றாம் இடமும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் தென்காசியை சார்ந்த முத்துலட்சுமி முதலிடமும் சுரண்டையைச் சேர்ந்த வளர்மதி இரண்டாம் இடமும் தென்காசியை சார்ந்த அக்ஷயா மூன்றாம் இடமும் பெற்றிருந்தனர் இதைப்போல் ஆணழகன் சுமார் 180 க்கும் மேற்பட்ட ஆண்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் காஜா முஹைதீன் முதலிடமும் சுரேஷ் இரண்டாம் இடமும் பத்ரேஷ் மூன்றாம் இடமும் பெற்றிருந்தனர் 55 கிலோ எடை பிரிவில் மணி ஹனிஷ் முதலிடமும் கவிதை இரண்டாம் இடமும் ஹானஸ்ட் ராஜ் மூன்றாம் இடமும் 60 கிலோ எடை பிரிவில் ராமர் முதலிடமும் மகேந்திரன் இரண்டாம் இடமும் சுஜித் முரளி மூன்றாம் இடமும் 65 கிலோ எடை பிரிவில் மகாலிங்கம் முதலிடமும் பிரதீப் ராஜ் இரண்டாம் இடமும் இசக்கி ராஜா மூன்றாம் இடமும் 70 கிலோ எடை பிரிவில் ஸ்ரீதரன் முதலாம் இடமும் சஞ்சய் குமார் இரண்டாம் இடமும் சிவராமன் மூன்றாம் இடமும் 75 கிலோ எடை பிரிவில் நிஷாந்த் முதலிடமும் பிரதேஷ் இரண்டாம் இடமும் கார்த்திகேயன் மூன்றாம் இடமும் men physiqe (short) பிரிவில் மணி ஹரிஷ் முதலாம் இடமும் ராம்ரா இரண்டாம் இடமும் பாலாஜி மூன்றாம் இடமும் men physique (tall) பிரிவில் மா தவன் முதலாமிடமும் அரவிந்த் கோபி இரண்டாம் இடமும் நிஷாந்த் மூன்றாம் இடமும் பெற்றனர்.
வலுதூக்குதல் பிரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இதில் 59கிலோ எடை பிரிவில் கன்னியா குமரியைச் சார்ந்த பெவின் பால் முதலிடமும் தூத்துக்குடியை சேர்ந்த ஜே ஆகாஷ் இரண்டாம் இடமும் திருநெல்வேலி சேர்ந்த எம் காந்தி மூன்றாம் இடமும் 120 கிலோ எடை பிரிவில் லிவிங் ஸ்டண்ட் டேவிட் கன்னியாகுமரி முதலிடமும் திருநெல்வேலி ஜோதி பிரபாகரன் இரண்டாம் இடமும் திருநெல்வேலி கணபதி சுந்தரன் மூன்றாம் இடமும் 120 கிலோ எடை பிரிவில் கிறிஸ்து சாங் தென்காசியை சார்ந்தவர் முதலிடமும் பெண்கள் பிரிவில் 47 கிலோ எடை பிரிவில் லட்சுமி சுகுணா முதலிடமும் தென்காசியை சார்ந்த முபின் ஷிவானி இரண்டாம் இடமும் 57 கிலோ எடை பிரிவில் தென்காசியை சார்ந்த சரோஜ் ஹரிணி முதலிடமும் திருநெல்வேலி சார்ந்த அருணா என்பவர் 63 கிலோ எடை பிரிவில் முதலிடமும் 69 கிலோ எடை பிரிவில் தென்காசி சார்ந்த முபின் பாரதி முதலிடமும் 69 கிலோ எடை பிரிவில் திருநெல்வேலியைச் சார்ந்த இஷாந்த் நெய்கரன் முதலிடமும், 76 கிலோ இடை பிரிவில் திருநெல்வேலியைச் சார்ந்த மகாலட்சுமி முதலிடமும் தென்காசியைச் சார்ந்த சித்ரா இரண்டாவது இடமும் 84 கிலோ எடை பிரிவில் தென்காசியை சார்ந்த சண்முகப்பிரியா முதலிடமும் 84 கிலோ எடை பிரிவிற்கு அதிகமாக உள்ள பிரிவில் தென்காசியை சார்ந்த ரஞ்சனி முதலிடமும் பெற்று சிறப்பித்தனர்.
மேலும் 59 கிலோ ஆண்கள் வலி தூக்குதல் பிரிவில் திருநெல்வேலியைச் சார்ந்த மகேந்திரன் முதலிடமும் தென்காசியை சார்ந்த சுஜித் முரளி இரண்டாம் இடமும் திருநெல்வேலியைச் சார்ந்த எம் சூர்யா மூன்றாம் இடமும் 66 கிலோ எடை பிரிவில் சென்று திருநெல்வேலி முதலிடமும் தென்காசியை சார்ந்த அகமது இஜாஸ் இரண்டாவது இடமும் தென்காசியை சார்ந்த சண்முகராஜா மூன்றாவது இடமும் 74 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சார்ந்த பாலமுரளி முதலிடமும் திருநெல்வேலியை சார்ந்த சிவ சண்முகா இரண்டாம் இடமும் தென்காசியை சார்ந்த முகமது அஜ்மல் மூன்றாவது இடமும் மேலும் 83 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சார்ந்த ஆகாஷ் ராபின் முதலிடமும் திருநெல்வேலியைச் சார்ந்த காசி பெருமாள் இரண்டாம் இடமும் திருநெல்வேலியைச் சார்ந்த ரகுமான் மூன்றாம் இடமும் மற்றும் 93 கிலோ எடை பிரிவில் திருநெல்வேலியைச் சார்ந்த கார்த்திகை கதிரேஷ் முதல் இடமும் கன்னியாகுமரியை சார்ந்த கிருஷ்ணகுமார் இரண்டாம் இடமும் த தென்காசியை சார்ந்த வின்சென்ட் மூன்றாம் இடமும் பெற்றனர்.
கொழு கொழு குழந்தைகள் போட்டி
60 குழந்தைகள் கொழு குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர். முதல் பரிசு சைரஸ் டிரினிட்டன் வயது. 11 மாதங்கள் பெற்றோர் பெயர் ஜான்சன், அல்போன்சா. மேலபட்டமுடையார்புரம் பாவூர்சத்திரம். இரண்டாவது பரிசு யுக நேத்ரா வயது: 7 மாதங்கள். பெற்றோர் பெயர் மணிகண்டன் பேச்சியம்மாள் பெரியபிள்ளைவலசை, மூன்றாவது பரிசு மகதி, வயது 10 மாதங்கள் பெற்றோர் பெயர் மாரிமுத்துகாவியா
நாய்கள் கண்காட்சி
நாய்கள்கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை. கன்னியாகுமரி மதுரை மாவட்டங்களைச் சார்ந்த கன்னி சிப்பிப்பாறை, ராஜபாளையம் கோம்பை இந்தியன் மாங்குரெல், முதோல் ஹவுண்ட், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடர், கோல்டன் ரெட்ரீவர், புல்லி குட்டா, இந்தியன் ஸ்பிட்ஸ், பக், பொமரேனியன், டேஷண்ட், கிரே கவுண்ட்டு, ராட்வீலர், டாபர்மேன், லசாப்சோ, புல் மாஸ்டிப், பிட்புல், ஷிட் சூ உட்பட 24 வகையான 118 நாய்கள் கலந்து கொண்டன. கண்காட்சியின் இறுதியில் ஒவ்வொரு இன நாய்களிலும் சிறந்த நாய்க்கு முதல் பரிசும், பங்கு பெற்ற அனைத்து நாய்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் நாட்டின நாய்களில் ஐயப்பன் என்பவருடைய கன்னி நாய்க்கும். அயல் நாட்டின நாய்களில் அஷோக் என்பவருடைய லேபரடார் ரெட்ரீவர் இன நாய்க்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.