கடையத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
World Population Day awareness event in Kadayam
2.8.2026
தென்காசி மாவட்டம் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாணவிகளிடையே உலக மக்கள் தொகை தினம் மற்றும் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சங்கரி மாணவிகளிடையே ஆற்றிய உரையில், மக்கள் தொகை பெருக்கம், இளவயது திருமணம், கர்ப்பம் தவிர்த்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துமாரி,வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகா, சமுதாய நல செவிலியர் ராதா (எ) சொர்ணம், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் ஆர்வமிக்க பங்கேற்புடன் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.