June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

சிக்கிம் எல்லையில் ஊடுருவிய சீன ராணுவம் விரட்டியடிப்பு; 20 சீன வீரர்கள் காயம்

1 min read

25/1/2/201

Chinese army infiltrates Sikkim border; 20 Chinese soldiers injured

சிக்கிம் எல்லையில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதில் காயம் அடைந்தனர்.

ஊடுருவல்

இந்திய எல்லையில் சீனா அடிக்கடி அத்துமீறி வருகிறது. கடந்த மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலில் ஈடுபட்டது. இதனை அடுத்து ஜூன் மாதம் நடந்த மோதலில் ஏற்பட்ட பல வீரர்கள் இறந்தனர்.
லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சர்ச்சைக்குரிய பகுதிகள் முழுவதிலும் சுமார் 50 ஆயிரம் வீரர்களை களமிறக்கி இந்தியா கண்காணித்து வருகிறது. அதேபோல் சீனாவும் தனது பங்குக்கு வீரர்களை நிறுத்தி இருக்கிறது. இதனால் லடாக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

பேச்சுவார்த்தை

இந்த பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ எல்லை பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. இந்திய தரப்பில் லே பிராந்திய 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணி வரை 15 மணி நேரம் நீடித்தது.

இந்த பேச்சுவார்த்தையிலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்தே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய மலைப்பிராந்திய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி, பதற்றத்தை தணிக்க வேண்டும் என சீனாவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ராணுவ பேச்சுவார்த்தைகளின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மோதல்

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் சிக்கிம் எல்லையில் உள்ள நாகு லா பாஸிக்கு பரவி உள்ளது. ஊடுருவிய சீன வீரர்களை விரட்டியடிக்கும்போது அங்கு இரு படைகளும் இடையே மோதல் ஏற்பட்டது- இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய வீரர்கள், சீன வீரர்களை விரட்டி அடித்தனர். இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *