நாக தோஷத்துக்கு பரிசாரம் செய்ய உகந்த நாட்கள்
1 min read
Ideal days to visit Naga Tosha
2/2/2021
இந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதி. இது மாலை 6.33 மணி வரை உள்ளது. இன்று பஞ்சமி திதியின் தேவதையான நாகத்தை வழிபடுவது நன்மையை தரும். மேலும் நாகதோஷத்துக்கு பரிகாரம் செய்யவும் உகந்த காலம்.
பிப்ரவரி 3-ந் தேதி புதன்கிழமை சஷ்டி. இந்த திதி மாலை 4.21 மணி வரை உள்ளது. சஷ்டியான இன்று முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு. அதோடு நாகபூஜை செய்யவும் நாகதோஷத்துக்கு பரிகாரம் செய்யவும் உகந்த நாள்.
பிப்ரவரி 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி காலை 7.16 மணி வரை தசமி திதி உள்ளது. அந்த திதியின் அதி தேவதை ஆதிசேஷன். எனவே இன்று காலை ஆதிசேஷனுடன் கூடிய பெருமாளை வணங்கலாம். மேலும் இன்ற கால நாகதோஷத்துக்கு பரிகாரமும் செய்யலாம். காலையில் செய்ய முடியாதவர்கள் முந்தைய நாளான 6ந் தேதி சனிக்கிழமை காலை 9.25 மணிக்க மேல் நாகதோஷ பரிகாரம் செய்யலாம்.
இந்த மாதம் 16-ந் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதி உள்ளது. அந்த பஞ்சமி திதியின் தேவதையான நாகரை வழிபடவும், நாகதோஷ நிவர்த்திக்கு பூஜை செய்யவும் உகந்த நாள். மறுநாள் புதன் கிழமை சஷ்டி அன்றும் முருகனை வழிபடவும் நாக தோஷ பரிகாரம் செய்யவும் உகந்த நாள்.
22-ந் தேதி திங்கட்கிழமை தசமி திதி அன்று அந்த திதியின் தேவதையான அதிசேஷனை வணங்குவது சிறப்பு. அன்றைய தினம் நாகதோஷத்திற்கு பரிகாரம் செய்யவும் சர்ப்ப சாந்தி செய்யவும் சிறந்த நாள். தசமி திதி மாலை 3.32 மணிவரைதான் உள்ளது.