95 சதவீதம் நுரையீரல் பாதிப்பில் இருந்த அமைச்சர் காமராஜ் முழுவதும் குணம் அடைந்துவிட்டார்
1 min readMinister Kamaraj, who had 95 per cent lung damage, has fully recovered
3.2.2021
கொரோனா தாக்கிய அமைச்சர் காமராஜ் 95 சதவீதம் நுரையீரல் பாதிப்பில் இருந்து குணம் அடைந்துவிட்டார். இது அதிசயம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்
அமைச்சர் காமராஜ்
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்ப்டடது. இதனால் அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்தனர்
அமைச்சர் காமராஜரின் உடல்நிலை குறித்து முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்&அமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் அவ்வப்போது கேட்டறிந்தனர்.
அமைச்சர் காமராஜின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தற்போது அளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனைஅடுத்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிசயம்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் . அமைச்சர் முழு அளவில் குணமாகிவிட்டார். இன்று மாலை (அல்லது) நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஒரு மாத தொடர் சிகிச்சைக்குப் பின் அமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சருக்கு ஆரம்பத்தில் 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் மீண்டு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உதவியுடன் அமைச்சர் குணமடைந்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.