டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ-.1 லட்சம் பரிசு
1 min readRs 1 lakh reward for information on Delhi violence
3.2.2021
டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
டெல்லியில் வன்முறை
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. அவர்கள் 2 மாதங்களுக்கும் மேல் சுற்றியை சுற்றி நின்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது. இந்தப் போராட்டத்தின்போது செங்கோட்டையில் கொடியேற்றிய பஞ்சாபை சேர்ந்த தீப் சித்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீப் சித்துவுடன் டெல்லி கலவரத்திற்கு காரணமான ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் ஆகிய«£ர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ-.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.