May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தண்ணீர் என நினைத்து சானி டைசரை குடித்த அதிகாரி

1 min read

The officer who drank Sony Dyser thinking it was water

3.2.2021

தண்ணீருக்குப் பதில் மும்பை மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார் சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இணை இயக்குனர்

மராட்டிய மாநிலம் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று (புதன் கிழமை) நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி இணை ஆணையாளர் ரமேஷ் பவாரின் மேஜையின் மீது சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக எல்லா பொது இடங்களிலும் கைகளை துடைத்துக் கொள்ள சானிடைசர் வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல்தான் அங்கும் வைக்கப்பட்டு இருந்தது.
ரமேஷ் பவார் கூட்டத்தில் தன்னை மறந்து இருந்தார். அவர் தன் முன்னால் இருந்த சானிடைசரை தண்ணீர் என்று நினைத்து எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த உதவியாளர்கள் அவரை மேலும் குடிக்காமல் தடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் பவார் கூறியதாவது:-
எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மேஜையில் இருந்த பாட்டிலை எடுத்து குடித்தேன். அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்களும் சானிடைசரும் ஒரே மாதிரி இருந்தன. நான் அதை குடித்த உடனே தவறை உணர்ந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பது இயல்பு,
இவ்வாறு அவர்கூறினார்.
இதற்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் யவத்மால் என்ற இடத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் திரவத்தை வழங்கியதால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிறு கோளாறு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.