மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு
1 min readUS support for federal agricultural laws
4.2.2021
மத்திய அரசு கொண்டவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.
வேளாண் சட்டங்கள்
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனால் 2 மாதங்களைத் தாண்டியும் போராட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த பிரச்னை குறித்து, நிருபர்களின் கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பதில் அளித்து கூறியதாவது:-
வரவேற்கிறோம்
அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும். இதைத் தான், இந்திய சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது. எந்த பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும்.
இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை, அமெரிக்கா வரவேற்கிறது.
விவசாய துறை சந்தையின் செயல்திறனை அதிகரிக்கும், அதிக அளவு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. அதுபோன்றே, இந்த சட்டங்கள் அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.