7 உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயர்- சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
1 min readCommon Name – Amendment Bill filed in Parliament as Devendrakula Vellalar along with 7 sub-sections
13.2.2021
7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர்
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன் படி மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அரசமைப்பு திருத்த சாசன மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு.