ஐஸ்வர்யா ராஜேஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
1 min readNetizens teasing Aishwarya Rajesh
13.2.2021
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப்படத்தில் இவரது நடிப்புத் திறமையின் பெருமையாக பேசப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும், ஆண்ட்ரியா கிட்ட கத்துக்கோங்கா என கலாய்த்துள்ளனர். காரணம் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஆண்ட்ரியாவின் காட்சி லாஜிக் இல்லாமல் இருந்ததாக கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.