May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

1 min read

Kamal Haasan meets actor Rajini

20.2.2021

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சந்தித்து பேசினார்.

ரஜினி, கமல்

நடிகர் ரஜினிகாந்த் அரசியில் ஈடுபட்டவில்லை என்று அறிவித்த பின்னர் பல கட்சிகள் அவரது ஆதரவை கேட்டவண்ணம் உள்ளனர். அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன், போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தார்.
படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்துடன் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.