September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஐஸ் கிரீமில் விஷம் கலந்து மகன், தங்கை சாவுக்கு காரணமான பெண்

1 min read

The son who mixed poison in ice cream, the woman who caused the death of his sister

25.2.2021

ஐஸ் கிரீமில் விஷம் கலந்து மகன் மற்றும் தங்கை சாவுக்கு காரணமான பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை முயற்சி

கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வர்ஷா காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா.

கடந்த 11 ந் தேதி இரவு, வர்ஷா தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்து வைத்திருந்தார். . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வர்ஷாவின் 5 வயது மகன் அத்வைதும்,19 வயது தங்கை திரிஷ்யாவும் மீதம் வைத்த ஐஸ் கிரீமை எடுத்து சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து, பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கின்றனர்.

மகன் சாவு

திடீரென இரவு, வர்ஷாவின் மகன் அதவைத் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் , அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதவைத் இறந்தவுடன் திரிஷ்யாவிற்கும் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர்,திரிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு வாரகாலம் கடுமையான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், நேற்று அவர் உயிரிழந்தார்.

மறைப்பு

விஷம் கலந்த ஐஸ் கிரீமை உண்ட பிறகும், தனக்கு எந்த பாதிப்பும் ஆகாததால், தன்னுடைய தற்கொலை முயற்சியைப் பற்றி குடும்பத்தினரிடத்தினரிடம் மறைத்துள்ளார் வர்ஷா. குடும்பத்தில் இருப்பவர்களும், அத்வைத் மற்றும் திரிஷ்யா சாப்பிட்ட பிரியாணியில் தான் ஏதோ கோளாறு என்று நினைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, வர்ஷாவின் உறவினர் சனோடு என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், வர்ஷா மீதம் வைத்த எலி மறந்து கலந்த ஐஸ் கிரீமை , அத்வைதும் திரிஷ்யாவும் உண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காசர்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து , வர்ஷாவை கைது செய்துள்ளனர். மேலும் வர்ஷாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.