May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தொகுதி பங்கீடு பற்றி அ.தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா இன்றும் பேச்சுவார்த்தை

1 min read

The Bharatiya Janata Party (BJP) is still in talks with the AIADMK over the distribution of constituencies

1.3.2021

தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தொகுதி பங்கீடு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக இன்று 2-வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பாஜக தரப்பில் எல்.முருகன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. நடத்தி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் ( சனிக்கிழமை) தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், பா.ம.க.வுக்கு நிகராக தங்களுக்கு தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாமல் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகி உள்ளது. 20 முதல் 25 தொகுதிகளை தேமுதிக எதிர்பார்ப்பதாகவும்
அதிமுக தரப்பில் 11 தொகுதிகள் மட்டுமே கொடுக்கமுடியும் என கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.