May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள்

1 min read

In the DMK alliance, the Indian Union Muslim League and the Humanitarian People’s Party have 2 constituencies each

1.3.2021

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணி

திமுக கட்சி கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று( ஞாயிற்றுக்கிழமை) முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் திமுக உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.