May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 462 ஆக குறைந்தது

1 min read

The incidence of corona in Tamil Nadu today has dropped to 462

2.3.2021

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 462 ஆக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,52,478 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருவர் மட்டும் கொரோனாவுக்க இறந்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,502 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 473 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,35,979 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,997 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,35,888 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.