May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிமுகவுடன் கூட்டணி இல்லை; -டிடிவி தினகரன் திட்டவட்டம்

1 min read

There is no alliance with the AIADMK; -DTV Dhinakaran Project

2.3.2021

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் -டிடிவி தினகரன் கூறினார்.

டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை தியாகராய நகர் இல்லத்தில், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்

பின்னர் அவர் கூறும்போது, “சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி. அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்.” என்றார்.

அதிமுக&அமமுக கட்சிகள் இணையுமா என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

விருப்ப மனு

நாளை முதல் அமமுக விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

விருப்ப மனுவுக்கான கட்டண தொகையாக, தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.