June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்றைய கொரோனா 867 ஆக அதிகரிப்பு

1 min read

Increase to today’s Corona 867 in Tamil Nadu

16.3.2021

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு புதிதாக 867 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக கு¬ந்து வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்றை ய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு:&

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை ளவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 867 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,429 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,84,13,572 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,193 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 94 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 64,006 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,20,367 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 498 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,41,027 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 369 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 3-ம் பாலினத்தவர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 பேர் சாவு

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 12,556 பேர் கொரேனா£வுக்க இறந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 561 பேர் இன்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 423 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 450 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 352 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,39,483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு கொரோனா

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேப்போல் மதுக்கூர் அருகே உள்ள ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைபார்க்கும் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *