6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத்திட்டம்: விஜய் அறிவிப்பு
1 min read
Breakfast scheme to be extended to students from 6th to 8th standard: Chief Minister Vijay
15.6.2026
காலை உணவுத்திட்டம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் செப்.,17 முதல், விரிவாக்கம் செய்ய செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
சமூக நலன் மற்றும மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம், திட்டங்களை துரிதமாகவும் தடையின்றியும் கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கத்திற்கு உள்ளாகாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை வரும் 17 ம் தேதி முதுல் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.