தேவேந்திரகுல வேளாளர் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
1 min read
Devendrakula Vellalar Bill passed in Parliament
19.3.2021
தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க இந்த வழிவகை செய்கிறது.
தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.