June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

1 min read

Mamata calls on opposition parties to unite against BJP

31.3.2021

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட மம்தா பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மம்தா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீது பாஜக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்ட மற்றும் பயனுள்ள போராட்டத்தை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்… இந்த கருத்துடைய உங்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இந்த போராட்டத்தில் இணைந்து பணியாற்ற முழு மனதுடன் தயாராக உள்ளேன்’
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
அந்த கடித்தத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு அதிகாரம் கவர்னருக்கு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றம், வேளாண் சட்டங்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அனுப்பியுள்ள இந்த கடிதம் இந்திய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *