May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

1 min read

Reduction in cooking gas cylinder price by Rs10

31.3.2021
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதை தொடர்ந்து, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.