June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

விபத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் காயத்துடன் உயிர் தப்பினார்

1 min read

Sivagangai District Collector survived the accident with injuries

24.4.2021
சிவகங்கை மாவட்ட கலெக்டர் கொரோனா ஆய்வு பணிக்குச் சென்ற போது அவரது கார் மின்கம்பத்தில் மோடி விபத்துக்குள்ளானது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சிவகங்கை கலெக்டர்

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருப்பவர் மதுசூதனன்ரெட்டி. இவர் தினமும் கொரோனா ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று காலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காரைக்குடி என்ஜினீயரிங் கல்லூரி பாதுகாப்பு பணியை ஆய்வு செய்ய காரில் புறப்பட்டார்.

காரை டிரைவர் செபஸ்டியான் ஓட்டினார். கலெக்டரின் உதவியாளர் மணிகண்டனும் உடன் சென்றார். கார் கல்லல் அருகே காலக்கண்மாய் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது குறுக்கே ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மீதுமோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார்.
இதில் கார் தடுமாறி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் கார் கவிழ்ந்து. மேலும் மின்கம்பம் முறிந்து அந்த காரின் மீது விழுந்தது.

உயிர்தப்பினார்

இந்த விபத்தில் கலெக்டர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். டிரைவர் செபாஸ்டியானும், உதவியாளர் மணிகண்டனும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த விபத்து குறித்துவிசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *