April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

துணை தலைவர் விலகல்; கமல் காட்டம்

1 min read

Vice president resignation; Kamal Kattam

6.5.2021

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். இதேபோல் இன்னும் சிலரும் விலகி உள்ளனர்.
இது குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அனுதாபம் தேட முயற்சி

தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தவர் மகேந்திரன்.
திறமையின்மையையும், நேர்மையின்மையையும் அடுத்தவர் மீது போட்டு அனுதாபம் தேட மகேந்திரன் முயற்சிக்கிறார்.
களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு மகேந்திரன் தானாகவே விலகி கொண்டார்.

கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை. மகேந்திரன் விலகியதில் மகிழ்ச்சி, இனி கட்சிக்கு ஏறுமுகம் தான்.
இவ்வாறு கமல் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.