May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்பு; முதல்வரைத் தவிர அனைவரும் புதியவர்கள்

1 min read

New cabinet to be inaugurated in Kerala tomorrow; Everyone is new except the first one

19.5.2021-
கேரளாவில் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. இதில் முதல்மந்திரியைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள்.

கேரள அரசியல்

கேரள அரசியில் மற்ற மாநிலங்களி்ல் இருந்து மிகவும் மாறுபட்ட அரசியல். மற்ற மாநலங்களைப்போல அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக கூடுவது இல்லை. அதேபோல் அமைச்சர் ஏன்.. முதல் அமைச்சரே வந்தாலும் எந்த பரபரப்பும் இருக்காது.

அதோடு அங்குள்ள மக்கள் நிலையாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். இதனால் அங்கு ஒவ்வொரு தேர்தலுக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆனால் விதிவிலக்காக இந்த தேர்தலில் தான் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் இந்த கூட்டணி வெற்றிபெற்றள்ளது.

சிறப்பான ஆட்சி

கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்ததே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா பரவலின் போது கேரளா மாடல் என்ற ஒரு நிலை உருவாகி அனைத்து மாநிலத்தவர்களும் அதை பின்பற்றும் அளவுக்கு பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி இருந்தது. இதுவும் அந்தக் கட்சி வெற்றிபெற்றதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.
கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இடதுசாரிகளே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் அதே நிலைதான் இருந்தது.

அமைச்சர்கள்

தேர்தல் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கேரளாவில் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பு ஏற்கிறது. முதல்-மந்திரியாக பிரனாயி விஜயன் தான் மீண்டும் பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டுது. ஆனால் அமைச்சர்கள் யார் என்று நேற்று முன்தினம்தான் அறிவிக்கப்பட்டது.
ஏனெனில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு இடதுசாரி கட்சி விதிகளின்படி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. எனவே சைலஜாவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கேரளா மாநிலத்தின் அமைச்சரவை பட்டியல் வெளியானது

அதில் பினராயி விஜயனை தவிர்த்து பழைய அமைச்சர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இடதுசாரி கூட்டணியில் பழைய அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படாது என்பது விதி. அதனால்தான் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3 பெண்கள்

அதன்படி 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . அவர்கள் டாக்டர் ஆர் பிந்து, சிஞ்சு ராணி, வீணா ஜார்ஜ்.
கடந்த முறை இரு பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த முறை 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

20 அமைச்சர்கள்

முதல்வரைத் தவிர்த்து மொத்தம் 20 புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் மார்க்சிஸ்ட் கட்சியினர் , 4 பேர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆவர்.

ஷைலஜா

புதிய அமைச்சர்கள் அறிவிப்பில் பெரிதும் ஆச்சரிப்பட வைத்தது, ஷைலஜா. இவர் கடந்த முறை சுகாதார அமைச்சராக இருந்தார். அவருக்கு எப்படியும் மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்றும் கூடுதல் துறை ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு அங்கு கொரோனா பரவலை அவர் சமாளித்த முறைதான் என்றும் கூறப்பட்டது. அவர் மட்டானூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த சாதனைகூட அவரின் செயல்பாட்டுக்கு என்றுதான் கூறப்படுகிறது.
அவரது சாதனை வெற்றி மட்டுமின்றி ஆளும் இடதுசாரி கூட்டணி தேர்தல் வெற்றிக்கே சுகாதாரத் துறையில் ஷைலஜாவின் செயல்பாடு என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக நிபா வைரஸ் காய்ச்சல் பரவல், மற்றும் தற்போதைய தொற்றுநோய் நாட்களில் அதன் சாதனைகள் முக்கியமானவை. சுகாதார நெருக்கடி நாட்களில் ஷைலஜாவின் தலைமை பாராட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், பொது சுகாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டது. குறிப்பாக அடிமட்ட அளவில், இப்போது கேரளா கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட உதவியுள்ளது.

அரசியல் வாரிசு

இவரின் பெயர் கட்சி வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியலும் அதிகமாக பேசப்பட்டது. இவரை கட்சி வட்டாரங்கள் பினராயி விஜயனின் அரசியல் வாரிசாக போற்றியது.

எனவே இவருக்கு மட்டும் விதிவிலக்காக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அமைச்சருக்கும் இரண்டாவது பதவிக்காலத்தில் இடம் இல்லை என்பது உருவாக்கப்பட்டு விட்டது.
இந்த முறை வீணா ஜார்ஜ் புதிய சுகாதார அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.

பதவி ஏற்பு

இந்த நிலையில் புதிய அமைச்சரவை நாளை (வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளது. திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகே உள்ள மத்திய ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்மந்திரி பினராய் விஜயன் உள்பட மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.