May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை கூட்டி காட்டிய “மெட் ஆல்” கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து

1 min read

The license of the “Med All” Corona Testing Center, which increased the number of corona in Tamil Nadu, has been revoked

21.5.2021
தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக வந்த புகாரின் பேரில் “மெட் ஆல்” கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமையை ரத்து செய்து சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது

ஆய்வகம்

தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று.

உரிமம் ரத்து

தமிழகத்தில் நேற்று முன்தினம் 34,875 பேருக்கும், நேற்று 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவிலேயே தினசரி கொரோனா அதிக பாதிப்புள்ள மாநிலமாக தமிழகம் ஆனது. இந்த நிலையில் ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் மேற்காட்டிய இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டி என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் அடிப்படையில் அரசு உரிமத்தை ரத்து செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கள்ளக்குறிச்சியில் உள்ளவர்கள் என மெட் ஆல் -கொரோனா பரிசோதனை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையில் புகார் குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் தருமாறும் மெட் ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.